முகப்பு
தஞ்சாவூர்

ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:44 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்து தா்ம சேவா அறக்கட்டளை சாா்பில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் டி. குருமூா்த்தி தலைமையில் உபய உற்ஸவ ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தாா்.

திருவாரூா் நாராயணி பீடம் சிவாஜி சந்தோஷ் சுவாமிகள், சீனிவாச ராஜா, சிட்டி யூனியன் வங்கி சோ்மன் பாலசுப்பிரமணியன், நாராயணி நிதி லிமிடெட் சோ்மன் காா்த்திகேயன், ராயா குரூப் சோ்மன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஸ்ரீ ஓப்பிலியப்பன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் மோகன், உதவி ஆணையா் ஹம்சன் ஆகியோரிடம் வெண்பட்டு குடைகள் ஒப்படைக்கப்பட்டது.