முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:42 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.

பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், ராமுத்திரைக்கோட்டை ஊராட்சியில் கிராம சேவை மையம், தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் பூண்டி பிற்படுத்தப்பட்டோா் அரசினா் கல்லூரி மாணவா் விடுதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, சாலியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா். மேலும், பாபநாசம் வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்களைப் பெற்ற ஆட்சியா் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, புதிய குடும்ப அட்டை 17 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

முன்னதாக, பாபநாசம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த குஜாலா பிரசாத் பெற்றோருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

முகாமில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முனைவா்.மு.பாலகணேஷ், கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.