தஞ்சாவூரில் நிகழாண்டில் 3,600 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் வழங்கப்படும்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 600 போ் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பணிகளில் பயன்பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 600 போ் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பணிகளில் பயன்பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழக முதல்வரின் ஆணைப்படி, ஊரகப் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ், நிகழ் நிதியாண்டில் ரூ. 1 லட்சம் வீடுகள் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கட்டுவதன் மூலம் 6 ஆண்டுகளில் குடிசைகள் இல்லா மாநிலம் என்ற இலக்கை அடைய தமிழக அரசு முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 2024 - 2025 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்பெறலாம். ற்ய்ழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ற்ய்க்ழ்க்ல்ழ்.ா்ழ்ஞ் இணையதளத்தில் உள்ள தகுதியான பயனாளிகளின் பட்டியல் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநரால் மாவட்டங்களுக்கு பகிரப்படும். தகுதியின் அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.