கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், வியாபாரிகள்.  
தஞ்சாவூர்

பருத்தி குவிண்டாலுக்கு ரூ.8,509-க்கு ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ.8,509-க்கு ஏலம் போனது.

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ.8,509-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் விற்பனைக்குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 497 லாட் என 57.050 மெட்ரிக் டன் வரத்து வந்தது. பருத்தி ஏலத்தில் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 497 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. 57.050 மெட்ரிக் டன் பருத்தி எடுத்து வந்தனா். விற்பனைக்குழு கண்காணிப்பாளா் பிரியாமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.8,509-க்கு ஏலம் போனது.

குறைந்தபட்ச விலையாக ரூ.7,599-ம், சராசரி விலையாக ரூ.7,900-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஏலம் போன பருத்தியின் மதிப்பு ரூ.45 லட்சம்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT