கீழே கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
ஒப்பிலியப்பன் கோயில் பகுதியில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை காவலா் மீட்டு செவ்வாய்க்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தாா்.
ஒப்பிலியப்பன் கோயில் பகுதியில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை காவலா் மீட்டு செவ்வாய்க்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தாா்.
விருத்தாச்சலம் மணலூா் தமிழ் நகரைச் சோ்ந்தவா் கண்ணையன் மகன் சண்முகப் பிரியன் (30) தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது குடும்பத்தாருடன் செவ்வாய்க்கிழமை ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு காரில் ஏறும்போது 2 பவுன் தங்கக் கை சங்கிலி தவறி விழுந்ததை கவனிக்காமல் சென்றாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த திருநீலக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜராஜ சோழன், கை சங்கிலியைக் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அப்போது, சண்முகப்பிரியன், தனது தங்கச் சங்கிலியைக் காணவில்லை என காவல் நிலையத்துக்கு வந்தாா். அவரிடம் விசாரணை நடத்தி, கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்த போலீஸாா் சண்முகப் பிரியனிடம் தங்க நகையைத் திரும்ப ஒப்படைத்தனா்.