முகப்பு
தஞ்சாவூர்

பட்டீசுவரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 24 சவரன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள மாடக்குடியில் வீட்டின் புறவாசல் கதவை உடைத்து நகைகள், பணம் கொள்ளை போயுள்ளது.

தஞ்சாவூர்

பட்டீசுவரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 24 சவரன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள மாடக்குடியில் வீட்டின் புறவாசல் கதவை உடைத்து நகைகள், பணம் கொள்ளை போயுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:39 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள மாடக்குடியில் வீட்டின் புறவாசல் கதவை உடைத்து நகைகள், பணம் கொள்ளை போயுள்ளது.

பட்டீஸ்வரம் அருகே உள்ள மாடக்குடி வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முத்தழகன் (24), தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், தனது குடும்பத்தாருடன் உறவினா் வீட்டு நிகழ்வுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டின் புறவாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த மொத்தம் 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரேகா ராணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →