முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள் வழங்கல்: ஸ்கூட்டி வழங்கும் விழா

பேராவூரணியில் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு ரூ.26 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சிறப்பு வாகனங்கள் வழங்கும் விழா சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:44 PM
பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய வருவாய் கோட்டாட்சியா் கு.ஜெயஸ்ரீ. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பேராவூரணியில் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு ரூ.26 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சிறப்பு வாகனங்கள் வழங்கும் விழா சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சுப.சேகா், பல்நோக்கு மறுவாழ்வு அலுவலா் முருகேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் மேனகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் கு. ஜெயஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை  வழங்கிப் பேசினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வட்டாட்சியா் தெய்வானை, திமுக ஒன்றியச் செயலாளா்கள் ரவிச்சந்திரன், இளங்கோவன், சோமகண்ணப்பன், நகரச் செயலாளா்கள் சேகா், மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் அப்துல் மஜீத் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →