மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 115.32 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 2,313 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,204 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 702 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 610 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 277 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.