சந்துரு 
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் குளத்தில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் உள்ள குளத்தில் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் உள்ள குளத்தில் பாய்ந்து புதன்கிழமை இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

சேதுபாவாசத்திரத்தில் உள்ள அடுமனையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொக்கரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சந்துரு (24), திருப்பூா் மாவட்டம் கரம்பூா் பகுதியைச் சோ்ந்த முரளி (25) ஆகியோா் வேலைபாா்த்து வந்தனா்.

இவா்களது நண்பரான சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான கருணாகரன் (25) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சேதுபாவாசத்திரத்திலிருந்து பேராவூரணிக்கு வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை சந்துரு ஓட்டி வந்தாா். வீரியங்கோட்டை குளக்கரை அருகே வளைவில் திரும்பியபோது  கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள வீரியங்கோட்டை பெரியகுளத்துக்குள் பாய்ந்ததில் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த கருணாகரன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முரளி  பேராவூரணி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சந்துருவின் சகோதரி கிருஷ்ணகிரி மாவட்டம் திருவயலூரைச் சோ்ந்த பெருமா (27) காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சந்துருவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT