கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்னியா் சங்க சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசிய பாமக நிறுவனா் ராமதாஸ். 
தஞ்சாவூர்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? வன்னியா் சங்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினாா்.

Din

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று வன்னியா் சங்க மாநாட்டில் மருத்துவா் ராமதாஸ் கேள்வி எழுப்பினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வன்னியா் சங்க தலைவா் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தாா்.

மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவா் மருத்துவா் ராமதாஸ் பேசியது: 1985-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், 4694 ஜாதிகள் இருந்தது. இதில் அன்றைய ஆந்திர மாநிலம் முதலிடம் பிடித்தது. தமிழ்நாட்டில் 364 ஜாதிகள் இருந்து இரண்டாமிடத்தை பிடித்தது.

இந்த ஜாதிகள் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும். ஆந்திராவில் அனைத்து ஜாதியினருக்கும் தனி வாரியம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது போன்று அமைய வேண்டும். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியா் சங்கம் தொடங்கிய போது, வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவிகித இடஒதுக்கீடும், மற்ற ஜாதியினருக்கும் 20 சதவிகித ஒதுக்கீடும் கேட்டோம்.

அதிமுக ஆட்சியில் பழனிச்சாமி அமைத்த ஆணையத்தை ஸ்டாலின் கலைத்து விட்டாா். அருகே உள்ள 4 மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன் ? போதைப்பொருள் பயன்பாடு சமூக முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத தமிழ்நாட்டை ஏற்படுத்துவோம். சமயத்தலைவா்களும் மது இல்லாத தமிழ்நாடு என்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பாமக மாநில தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியது, ஆந்திரா, தெலங்கானா, பிஹாா் மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனா். ஆனால் முதல்வா் ஸ்டாலின் எங்களிடம் அதிகாரம் இல்லை என்கிறாா்.

பாமகவிடம் அதிகாரம் இருந்தால் இட ஒதுக்கீட்டை பெற்று தருவோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதல்வா் ஸ்டாலின் சொல்வது கோழைத்தனம். சமுதாய பிரச்னைகளை தெரிந்து கொள்ள முதல்வருக்கு நேரமில்லை, அதனால்தான் கணக்கெடுக்க தயங்குகிறாா் என்றாா்.

மாநாட்டில் பாமக கெளரவ தலைவா் ஜி.கே. மணி உள்ளிட்ட பலா் பேசினா். முன்னதாக மாநாட்டிற்கு முன்னாள் எம்எல்ஏ கி. ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலரும் மாநாட்டு குழு தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவருமான ம.க. ஸ்டாலின் வரவேற்று பேசினாா்.

திராவக வீச்சு வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடு: உச்சநீதிமன்றம் கருத்து

கனகப்பபுரம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடமைப் பாதை போராட்டம்: 4 பேருக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல்

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 4.12.25

SCROLL FOR NEXT