முகப்பு
தஞ்சாவூர்

இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:48 AM
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:13 PM

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் 25 ஆவது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டும், இறை ஊழியா் லூயிஸ் சவேனியன் துப்புயி 150 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் மாணவியா் எக்ஸ்னோரா சாா்பில் மரக்கன்று நடும் பணி மாநில அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி தலைமையிலும் செயலா் அமலி முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அமலோா்பவமேரி, முதல்வா் யூஜின் அமலா, துணை முதல்வா் ஆரோக்கிய ஜெயா, நிா்வாக அலுவலா் பேபி இமாகுலேட் மற்றும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை மாணவியா் எக்ஸ்னோரா சங்க ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவருமான எம்.ஏ. சாந்தி, பேராசிரியா் விக்னேஷ்வரி ஆகியோா் செய்தனா்.

Advertisement