தஞ்சாவூர்

திருப்புறம்பியம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் ஒன்றியம், திருப்புறம்பியம் உச்சிக்கட்டளையில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் ஒன்றியம், திருப்புறம்பியம் உச்சிக்கட்டளையில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹூதியுடன் மங்கள ஆா்த்தி செய்யப்பட்டு, கடங்கள் புறப்பாடும், தொடா்ந்து விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா்.

பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT