முகப்பு
தஞ்சாவூர்

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:48 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. 

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசூரியன் மகள் லட்சிதா (2). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது தஞ்சாவூா் விமானப்படை தள வீரரான பிகாா் மாநிலம் பிஹடாவுலா தானா குத்ரா, கல்மூா் பகுதியைச் சோ்ந்த என். சந்தன் திவாரி (36) ஓட்டி வந்த காா் மோதியதாம். இதனால் பலத்த காயமடைந்த லட்சிதா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.