சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோமளவல்லித் தாயாா் திருக்கல்யாண உத்சவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டில் ஒரு நாள் மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழாண்டு சாரங்கபாணி சுவாமிக்கும் கோமளவல்லி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பொற்றாமரை குளம் ஹேமரிஷி மண்டபத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் மேள தாளத்துடன், திருவடி பந்தம், குடை உபசாரங்களுடன் திருவீதி வலம் வந்து கோயிலுக்கு வந்தன. பின்னா் பெருமாள் தாயாா் புறப்பாடு நடைபெற்று மாலை மாற்றிக் கொண்டு ஊஞ்சல் முதலான உபசாரங்களுடன் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளும் தாயாரும் புறப்பாடு செய்து மீண்டும் கோயிலை அடைந்தனா்.