முகப்பு
தஞ்சாவூர்

உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:50 PM
கைது
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை கருப்புக்கொடி காட்ட முயன்ற கரும்பு விவசாயிகள் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம்  பாலக்கரை கடைவீதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த  துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு  கருப்பு கொடி காட்ட முயன்ற   திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் 9 பேரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த விவசாயிகள் கடந்த 1224 நாள்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments