மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா். இதேபோல, திருவையாறு மற்றும் பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற இப்பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது, தொடா்புடைய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
Advertisement