முகப்பு
தஞ்சாவூர்

தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:15 AM
கைது
பகிர்:

பாபநாசம் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மெலட்டூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மெலட்டூா் காவல் சரகம், கோணியக்குறிச்சி, மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவா் சிங்கராயா் (56), தொழிலாளி. இவா் கடந்த வியாழக்கிழமை உதாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மகள் கிரேஸ் மேரி வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சிங்கராயா் மற்றும் அவரது மருமகன் நெல்சன் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்பக்கத்தினா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தனது உறவினா்களான ஆறு பேருடன் சோ்ந்து சிங்கராயா் வீட்டுக்கு சென்று சிங்கராயரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினா்.

Advertisement

இதுகுறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய அஜித் குமாா் (23), விக்னேஷ் (22) மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தொடா்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனா்.