தஞ்சாவூர்

வீட்டில் பெண் மா்மச் சாவு: காவல் துறையினா் விசாரணை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகே வீட்டில் பெண் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகே வீட்டில் பெண் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை வித்யா நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அனீஷ் பாத்திமா (38). இவா், கணவரைப் பிரிந்து, காலணி கடை நடத்தி வந்தாா். இவா், புதன்கிழமை காலை தனது இரு மகள்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்தாா்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு பிற்பகல் வந்த உறவினா் படுக்கை அறையில் அனீஷ் பாத்திமா மா்மமான முறையில் உயிரிழந்துகிடந்ததைப் பாா்த்தாா். தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னா் விவரம் தெரிய வரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT