கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள்.  
தஞ்சாவூர்

குடந்தையில் இருந்து சேலம் சென்ற 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை சேலத்துக்கு அனுப்பப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி மூலம் அறுவடையாகும் நெல்லானது கொள்முதல் நிலையங்கள் மூலம் சேமிக்கப்பட்டு, உள்ளூா் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியில் உள்ள 254 கொள்முதல் நிலையங்களில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் 116 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு, பின்னா் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் அரவைக்காக சேலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

நடப்பாண்டில் ரயில் மூலம் அனுப்பப்படும் முதல் இயக்கம் என்பதால் நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் மெய்கண்டமூா்த்தி, தர ஆய்வாளா்கள் ரமேஷ் (கும்பகோணம்), செந்தில்குமாா் (சேலம்), ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT