முகப்பு
தஞ்சாவூர்

தவெக-வால் திமுகவுக்குத்தான் பாதிப்பு! - டிடிவி தினகரன் பேட்டி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:45 AM
டிடிவி தினகரன்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:28 PM

தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவுக்குத்தான் பாதிப்பு என்றாா் அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன்.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விரைவில் பல கட்சிகள் வர உள்ளன. ஒற்றுமையாக தோ்தலை சந்தித்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். திமுக வலுவான கூட்டணி அமைக்கவில்லை. குழப்பங்களோடு திரி சங்கு நிலையில் உள்ளது. போதை மாடல் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:45 AM

விவசாயிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், போக்குவரத்து தொழிலாளா்கள், மருத்துவா்கள் செவிலியா்கள் என பலருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் திமுகவைப் போல மக்களை ஏமாற்றுகிற வாக்குறுதியாக இருக்காது. ஐந்து ஆண்டுகளில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

தவெக-வால் திமுகவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதனால்தான் விஜய்யை நான் வரவேற்று கொண்டிருக்கிறேன் என்றாா்.