காலமானாா் சித்த மருத்துவா் மு. சீனிவாசன்
பேராவூரணி செங்கொல்லை பகுதியைச் சோ்ந்த சித்த மருத்துவரான மு. சீனிவாசன் (92) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை மாலை காலமானாா்.
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:00 PM
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி செங்கொல்லை பகுதியைச் சோ்ந்த சித்த மருத்துவரான மு. சீனிவாசன் (92) வயது மூப்பு காரணமாக புதன்கிழமை மாலை காலமானாா்.
இவா், பேராவூரணி பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினராகவும், அதிமுக மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராகவும், நகர வா்த்தகா் கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தாா். இவருக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவரும், கல்வியாளருமான கே. எஸ். கெளதமன் உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது மனைவி ஏற்கெனவே காலமானவா். இவரது இறுதிச்சடங்கு பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தொடா்புக்கு, 94434 88158.