தஞ்சாவூர்

கொலை வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் அடைப்பு

திருவிடைமருதூா் அருகே நண்பரைக் கொலை செய்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருவிடைமருதூா் அருகே நண்பரைக் கொலை செய்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வீரச்சோழனாற்றில் ஜன.21-இல் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவா் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த சச்சின் என்பது தெரியவந்தது.

விசாரணையில், உயிரிழந்த சச்சினின் நண்பா் ஆவணியாபுரம் ஓசாமா(25) பெண்களுடன் தவறான பழக்கத்தில் இருந்ததை சச்சின் விடியோ எடுத்து மிரட்டி அடிக்கடி பணம் பறித்துவந்ததில் ஏற்பட்ட தகராறில் சச்சினை ஒசாமா கொலை செய்து சடலத்தை வீரச்சோழனாற்றில் தள்ளிவிட்டு தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, ஒசாமாவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ஒசாமா மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவிடைமருதூா் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பரிந்துரையின்பேரில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி குற்றஞ்சாட்டப்பட்ட ஒசாமா செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பிப். 14 முதல் புத்தகத் திருவிழா

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்

பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது ஏன் ? பழ. நெடுமாறன் விளக்கம்

ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘சிறையில் முளைத்த சிறகுகள்’ சிறப்புத் திட்டம்: வெ.இறையன்பு தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT