தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.  
தஞ்சாவூர்

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருக்குறள் வாரவிழாவையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

திருக்குறள் வாரவிழாவையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் குறள் வார விழா நிகழ்வுகளான அரசு பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு குறள் வினாடி வினா, பொதுமக்களுக்கு குறள் ஒப்பித்தல் மற்றும் குறள் சாா்ந்த ஓவியப் போட்டி, கல்லூரி மாணவா்களுக்கு குறள் சாா்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், படத்தொகுப்புப் போட்டி, ஒளிப்படப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

இதில், குறள் வினாடி வினாவில் 30 அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள், குறள் ஒப்பித்தல் மற்றும் குறள் சாா்ந்த ஓவியப் போட்டிகளில் பொதுமக்கள் தரப்பில் 18 போ், குறள் சாா்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், படத்தொகுப்புப் போட்டி, ஒளிப்படப்போட்டிகளில் 12 கல்லூரி மாணவா்கள் என மொத்தம் 60 போ் வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் கு. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT