சரவணகுமாா்.  
தஞ்சாவூர்

முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

தஞ்சாவூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி முத்தாலம்மாள் நகரைச் சோ்ந்தவா் எஸ். ராமநாதன் (70). இவா், மருத்துவக்கல்லூரி சாலை மூலிகைப் பண்ணை அருகேயுள்ள ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்காக ஜனவரி 30-ஆம் தேதி பிற்பகல் சென்றாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா் ராமநாதனிடம் பணம் எடுத்துத் தர உதவி செய்வதாகக் கூறினாா். இதை நம்பிய ராமநாதனும் மா்ம நபரிடம் ஏடிஎம் அட்டையை வழங்கினாா்.

இதையடுத்து, மா்ம நபா் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை எனக் கூறி, வேறொரு அட்டையை ராமநாதனிடம் கொடுத்தாா். இதைக் கவனிக்காமல் ஏடிஎம் அட்டையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றாா். இதன் பின்னா், ராமநாதனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்ட விவரம் அவரது கைப்பேசி எண்ணுக்கு வந்தது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். இதன் மூலம் கரூா் மாவட்டம், குளித்தலை அருகே கீழ் நங்கவரம் கிராமத்தைச் சோ்ந்த எஸ். சரவணகுமாா் (31) மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சரவணகுமாரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு 1,206 மடிக்கணினிகள் வழங்கல்

மறியல்: 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

அரசு மருத்துவரின் காரில் ரூ. 60 ஆயிரம் திருட்டு

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

பள்ளியருகே இருந்த மதுக் கடை மாற்றம்

SCROLL FOR NEXT