தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

Syndication

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் முன்னிலை வகித்தனா்.

திமுக மத்திய மாவட்ட அவைத்தலைவா் சி. இறைவன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மதிமுக மாநகரச் செயலா் துரை சிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி பி. செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, திருவையாறு, மேலத்திருப்பூத்துருத்தி, வல்லம், திருவோணம் உள்பட ஏறத்தாழ 40 இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT