அரசுப் பள்ளிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம்
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:37 PM
கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.48.56 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ. 23.56 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டப்பட்டது.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:53 AM
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இரண்டு பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்ளை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
Advertisement
நிகழ்வில் கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், விஜயலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் டி.கணேசன், ஜெ.சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.