முகப்பு
தஞ்சாவூர்

கௌரவ விரிவுரையாளா்கள் 9-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரி, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன், தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:22 AM
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:23 PM

தஞ்சாவூா்: பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரி, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன், தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா் 9-ஆவது நாளாக திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயம் செய்த ரூ. 57 ஆயிரத்து 800 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா் வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல, 9 ஆவது நாளாக திங்கள்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், த. நெடுமாறன், வ. சிவகுமாா் தலைமையில் வினோத்வேலன், ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement