முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:37 PM
விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன்
பகிர்:

பேராவூரணி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசம் மகன் கோகுல்ராஜ் (23). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தாா்.

கோகுல்ராஜ்

இவரது நண்பரான ஆண்டிக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (23). இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை, திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். 

Advertisement

சுவாமி தரிசனம் செய்துவிட்டு சனிக்கிழமை அதிகாலை சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தனா் அப்போது, தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments