முகப்பு
தஞ்சாவூர்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:08 PM
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி பி. வேல்முருகன்.
பகிர்:

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஆனந்தம் சட்டக் கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக ரயிலடி வரை சென்றது.

மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். பாரதி, நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →