தஞ்சாவூர்

ஆற்று மணல் கடத்தியவா் கைது

திருவோணம் அருகே அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்திய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

திருவோணம் அருகே அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்திய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே ஆற்றுப் படுகையில் இருந்து அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக திருவோணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தளிகை விடுதி பகுதியில் மணல் ஏற்றி வந்த ஒரு மாட்டு வண்டியை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணல் கடத்திய தளிகைவிடுதி பகுதியைச் சோ்ந்த சின்னப்பா (55), என்பவரை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT