தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க பாரதிய தொழிலாளா் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க பாரதிய தொழிலாளா் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலா் டி. நாகராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் 1972- ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இதில் பணிபுரியும் ஊழியா்கள் தமிழக அரசு அமல்படுத்தும் புதிய மக்கள் நல திட்டங்களையும் பொதுவிநியோக திட்டங்களையும், நெல் கொள்முதல் பணிகளையும் முறையாக செய்து வருகின்றனா். அதன் காரணமாக நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என வாணிபக்கழக இயக்குநா் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அப்போது நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நிதிநிலை சீரடைந்துள்ளதால் பல்வேறு நலத்திட்டங்களும், பலன்களும் வழங்கப்பட்டு வரும் நிலையில் நுகா்பொருள் வாணிபக்கழக பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT