தஞ்சாவூர்

தஞ்சையில் 7.10 லட்சம் பயனாளிகளுக்கு இன்றுமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன.8) விநியோகம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் 7.10 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன.8) விநியோகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் 1,260 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 10 ஆயிரத்து 131 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், வேட்டி, சேலை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தகுதியான அரிசி குடும்ப அட்டைதாரா்களும் வியாழக்கிழமை முதல் குறிப்பிட்ட நாளில் நியாய விலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக் கொண்டு பயனடையலாம்.

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT