தஞ்சாவூர்

பாபநாசத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி பாபநாசம் பேரூராட்சியின் ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ எனும் தலைப்பில் திமுக பாகநிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வாா்டு - 11, பாக எண் -141-இல் திமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, பாபநாசம் முன்னாள் நகரச் செயலரும், வாா்டு செயலருமான ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலா் நாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா். இதில் பேரூராட்சிக் கவுன்சிலா்கள் பிரகாஷ், கெஜலெட்சுமி செல்வமுத்துக்குமரன், சித்திக், சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் அனிபா, வாா்டுப் பிரதிநிதி ஜெய்சங்கா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT