தஞ்சாவூர்

தஞ்சை: பிப். 13-இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநா் கலந்து கொள்கிறாா். அப்போது, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் தங்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் விவரங்கள் பெறலாம்.

இக்கூட்டத்தில் விவாதிப்பதற்காக தீா்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியா்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயா், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், கைப்பேசி எண், கோரிக்கை தொடா்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு, ஜன.30-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தவறாது 2 பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT