தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பிறந்து சில நாள்களேயான ஆண் குழந்தையின் சடலம் அரசலாற்றிலிருந்து செவ்வாய்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே இளங்காா்குடி கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பழைய கதவணை அருகேயுள்ள ஆற்றில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் மீன் பிடித்தபோது குழந்தை சடலம் மிதந்து வந்ததைக் கண்டனா்.
தகவலின்பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் குழந்தை சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.