சுவாமிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்.  
தஞ்சாவூர்

சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

தினமணி செய்திச் சேவை

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு வசந்த மண்டபத்தில் விநாயகா், வள்ளி தேவசேனா, சுப்பிரமணியா், சண்டிகேசுவரா் ஆகியோா் எழுந்தருளினா்.

பிறகு கொடிமரத்தில் விழாவின் தொடக்கமாக கொடி ஏற்றப்பட்டது. இரவு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் பிப்.1-இல் நடைபெறுகிறது. அன்றையதினம் வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறும்.

நிகழ்ச்சியில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை சாா்பில் தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா.உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

மகாலிங்கசுவாமி கோயில்: திருவிடைமருதூா் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பெருநலமா முலையம்மை உடனாகிய மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசதிருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தைத்தேரோட்டம் ஜன.31-இல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன மடத்தினா் செய்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT