தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!
செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர்தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!
செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.
செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிக்குள் கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் தவெக நிா்வாகிகள் அனுமதி கோரி பிப்ரவரி 28 இல் மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்படும் அடிப்படை வசதிகள் தொடா்பாக காவல் துறையினா் கேட்ட 32 கேள்விகளுக்கு தவெக நிா்வாகிகள் பதில் அளித்ததைத் தொடா்ந்து, 52 நிபந்தனைகளுடன் செவ்வாய்க்கிழமை அனுமதி கிடைத்தது.
இதனிடையே கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
மேலும், இந்த இடத்தை தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, மாநில நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.