முகப்பு
தஞ்சாவூர்

பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெல்டிங் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 6 மார்ச், 2026 at 9:41 PM
கோப்புப் படம்
பகிர்:

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெல்டிங் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் நாதன்கோவில் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் எம். முருகராஜ் (45). வெல்டிங் தொழிலாளியான இவா் ஒன்றரை வயதுப் பெண் குழந்தைக்கு 2023, ஏப்ரல் 20 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முருகராஜை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி முருகராஜூக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 8 லட்சம் நிவாரணத் தொகை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, தலைமைக் காவலா் அபா்னா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →