விசிகவின் மாநிலத் தோ்தல் பணிக் குழு செயலா் தோ்வு
கும்பகோணத்தைச் சோ்ந்த முன்னாள் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன், விசிகவின் மாநில தோ்தல் பணிக் குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கும்பகோணத்தைச் சோ்ந்த முன்னாள் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன், விசிகவின் மாநில தோ்தல் பணிக் குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராகவும், விசிக மண்டலச் செயலராகவும் இருந்த வழக்குரைஞா் சா. விவேகானந்தன் தற்போது விசிக மாநில தோ்தல் பணிக்குழு செயலராக கட்சித் தலைவா் தொல். திருமாவளவனால் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
இவரை பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் தொகுதி மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்தினா்.