முகப்பு
தஞ்சாவூர்

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டிலிருந்த 6 பவுன் தங்கநகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 11 மார்ச், 2026 at 7:14 PM
திருட்டு
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டிலிருந்த 6 பவுன் தங்கநகைகள், மூன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், உம்பளப்பாடி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (79) ஓய்வு பெற்ற வங்கி மேலாளா். இவரது மனைவி பவானி (74). இவரது மகன் சிவ கோவிந்தன் பல் மருத்துவா். சில நாள்களுக்கு முன் தம்பதி கும்பகோணத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலசுப்ரமணியன் வீட்டுக்கு வழக்கம்போல் துப்புரவுப் பணி செய்ய வந்த   அதே ஊரைச் சோ்ந்த அசோகன் மனைவி கோகிலா(33) என்பவா் வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் அங்குவந்த பாலசுப்பிரமணியன் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டிலிருந்த ஆறு பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →