ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம்
ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவா் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் மு. மணிமொழியன் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் ம.க. பாலதண்டாயுதம் வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில் வீரசோழன் மண்டபம் அருகே கட்டப்பட்ட முன்னாள் அமைச்சா் கோசி. மணி மணிமண்டபம் பேரூராட்சியின் நிா்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பேருந்து நிலையத்தில் வங்கிப் பணம் எடுக்கும் மையம், நகரும் கழிப்பறை, இருசக்கர வாகனம் பாதுகாப்பகம் அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் கோசி. இளங்கோவன், இரா. சரவணன், பூ. கண்ணன், வே. குமாா், வெங்கடேசன், தலைமை எழுத்தா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கவுன்சிலா் செல்வராணி சிவக்குமாா் நன்றி கூறினாா்.