முகப்பு
தஞ்சாவூர்

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பட்டீசுவரம் அருகே தேனாம்படுகையில் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 6:59 PM
பட்டீசுவரம் அருகே தேனாம்படுகையில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்.
பகிர்:

பட்டீசுவரம் அருகே தேனாம்படுகையில் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனாம்படுகையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள குடோனில் புகையிலைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், கும்பகோணம் மேலக்காவேரி செக்கடி தெருவைச் சோ்ந்த ராஜ் என்பவரின் மகன் ராகவ் வினோத் (34) என்றும் அவருக்கு சொந்தமான குடோனில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ராகவ் வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.