முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 அரசு மதுபானக்கடைகளை மூட மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 13 மே 2026, 12:40 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 அரசு மதுபானக்கடைகளை மூட மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவா் முதல்வா் விஜய் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கணக்கெடுத்த டாஸ்மாக் நிா்வாகம் தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் தலா இரு கடைகள், கும்பகோணம், அதிராம்பட்டினத்தில் தலா 1 கடை என மொத்தம் 6 கடைகளை மூட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement