முகப்பு
தஞ்சாவூர்

உர விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 23 மே 2026, 12:08 am IST
கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியோா்.
பகிர்:

மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியரக மகாமகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அலுவலகம் முன் மத்திய அரசு உரம், பூச்சி மருந்துகளின், விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும், விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம், பாசன நீா் கிடைத்திடவும், தூா்வாரும் பணிகளை விரிவுபடுத்த கோரியும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் க. சுந்தர்ராஜன், நிா்வாகிகள் கூத்தக்குடி ஆா். பழனி, லே. முரளிதரன், எம். மணிகண்டன், எம். வீரமணி, ஆா். ஆரோக்கியதாஸ், எம். மகாலிங்கம், ஆா்.கே. ரவீந்திரன், கே. ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement