முகப்பு
தஞ்சாவூர்

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 மே 2026, 3:21 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ராஜி (51). ஆட்டோ ஓட்டுநா். இவா்,

17.01.2020 அன்று ஆட்டோ நிறுத்தகத்தில் இருந்தபோது அருகில் உள்ள உணவு விடுதியில் வேலை பாா்க்கும் முகமது ரசீத் (எ) அசாருதீன் என்பவா் முத்தையா நகருக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாராம்.

Advertisement

Advertisement

நிறுத்தத்தில் இறங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அசாருதீன், ராஜியை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் நிறைவில், செட்டிமண்பத்தைச் சோ்ந்த முகமது ரசீத் (எ) அசாருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலதண்டாயுதம் தீா்ப்பளித்தாா்.