முகப்பு
திருச்சி

உகாண்டா இளைஞர்களிடம் துணை ஆணையர் விசாரணை

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மது அருந்தும் கூடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மது அருந்தும் கூடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேரிடம் கா வல் துணை ஆணையர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
 திருச்சி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் மது அருந்தும் கூடத்தில் டிசம்பர் 31-ம் தேதி உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் மது அருந்தினார்களாம்.
 மது அருந்தும் கூடத்தை மூட வேண்டும், நேரம் முடிந்து விட்டது, வெளியே செல்லுங்கள் என அதன் உரிமையாளர் தெரிவித்தும் இளைஞர்கள் செல்ல மறுத்ததோடு, தகராறில் ஈடுபட்டார்களாம்.
 இது குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் மது அருந்தும் கூடத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்த நிலையில், கன்டோன்மென்ட்டில் மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சத்தியப்பிரியா வெள்ளிக்கிழமை மாலை, உகாண்டா இளைஞர்களை அழைத்து விசாரித்தார்.
 டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து இவர்களிடம் விசாரிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →