திருச்சி

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.92 லட்சம் உதவி

DIN

திருச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.92 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொடி நாள் தேநீர் விருந்து வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் கு.ராசாமணி பேசியது: ஆண்டு தோறும் டிச. 7ஆம் தேதி படைவீரர் கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடிநாள் வசூலில் தமிழகத்திலேயே அதிக இலக்கு திருச்சி மாவட்டத்துக்கு அளிக்கப்படுகிறது. உயர்நீத்த வீரர்களது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 6 பேருக்கு ஊரக வளர்ச்சித்துறையில் வேலைஅளிக்கப்பட்டுள்ளது. காத்திருப்போரில் உள்ள ஒரு நபருக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறையிலேயே பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கண்கண்ணாடி நிதியுதவி, புற்றுநோய் நிதியுதவி, மனநலம் குன்றிய சிறார்களுக்கான நிதியுதவி, பக்கவாத நிதியுதவி, மாதாந்திர நிதியுதவி, இரண்டாம் உலகப்போர் நிதியுதவி என 332 பேருக்கு ரூ.92 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தொகுப்பு நிதியின் வாயிலாக வங்கிக் கடன், வட்டி மானியம், கல்வி நிதியுதவி, வருடாந்திர பராமரிப்பு மானியம் என 80 பேருக்கு ரூ9.20 லட்சம் கடந்தாண்டில் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கல்வி உதவித்தொகையாக 50 சிறார்கள் மற்றும சிறுமிகளுக்கு ரூ.12.33 இலட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருப்போரில் உள்ள 285 பேரில் 185 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர், அவர்களது குடும்பத்தினருக்கு சிற்றுண்டி வழங்கி ஆட்சியர் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT