திருச்சி

சோபனபுரம் ஜல்லிக்கட்டில் 13 பேர் காயம்

DIN

துறையூர் வட்டம் சோபனபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 5 வீரர்கள் 13 பேர் காயமடைந்தனர்.
சோபனபுரத்தில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, அரியலூர், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மாடு உரிமையாளர்கள் 241 காளைகளுடனும், மாடுபிடி வீரர்கள் 204 பேர் சீருடையுடன் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் களத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முசிறி கோட்டாட்சியர் எஸ். ஜானகி, முசிறி டிஎஸ்பி பாலமுருகன் ஆகியோர் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தனர். விதிகளை பின்பற்றாத 12 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 5 மாடுபிடிவீரர்கள் உள்பட  13 பேர் காயமடைந்தனர். சோபனபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT