திருச்சி

அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்

DIN

அதிமுகவை மீட்டெடுப்போம் என அதிமுக (அம்மா) அணியின் துணைப்பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட  திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த அவர் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம்  கூறியது:   எம்ஜிஆர் மறைவுக்குப்  பிறகு அன்றைய பேரவைத் தலைவர்  இதே போன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். தற்போது  ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை நீக்கம் செய்யாமல் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என,   ஆளுநரிடம் (எனது உத்தரவின் பேரில்)  மனு அளித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் பேரவைத் தலைவர். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது செல்லாது என நீதிமன்றத்தை நாடி நிரூபிப்போம்.
இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். வெளிப்படையாக எங்களுக்கு 21 பேர் ஆதரவளிக்கின்றனர்.  மேலும்  12 பேர் அமைதியாக இருக்கின்றனர்.   நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது எங்களது பெரும்பான்மையை  காட்டுவோம்.  பொறுத்தவர்தான்வெற்றி பெறுவர். துரோகம் செல்லாது. எப்போது தேர்தல் வந்தாலும் சசிகலாவின்  தலைமையில் எந்த சின்னமாக இருந்தாலும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.  இந்த இயக்கத்தை கட்டிக்காக்கிற பொறுப்பு எனக்கும் உண்டு.
பாஜக ஜனநாயகத்தை மதிக்காமல்,  நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தமிழக  மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.  தமிழகத்தின் ஜனநாயகம் காப்பாற்றப் படவேண்டும்.   
7 லட்சம் பேர் எங்களுக்கு ஆதரவாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளதால், எங்களுக்கு தான் அஇஅதிமுகவும் , இரட்டை இலை சின்னமும் கிடைக்கும் என்றார். பேட்டியின் போது,  மாவட்டச் செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT