முகப்பு
திருச்சி

மலையடிப்பட்டி தூய தோமையார் ஆலய தேரோட்டம்

மணப்பாறை அருகே தூய தோமையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:11 AM
பகிர்:

மணப்பாறை அருகே தூய தோமையார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள தூய தோமையார் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.5) தூய தோமையார் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சியும், சனிக்கிழமை (ஏப்.7) உயிர்த்த ஆண்டவர் தூய தோமையார் சந்திப்பு, தேர் பவனி நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வாக,  தூய தோமையார் ஆலயத்தில் பங்குத் தந்தை அம்புரோஸின் சிறப்பு திருப்பலிக்கு பின் பெரிய தேர் ஊர்வலம் புறப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த தேர் மீது, பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் அளித்த வரவேற்புக்கு பிறகு தேரடிக்கு வந்தது.
மலையடிப்பட்டி பங்கு சார்ந்த மலைதாதம்பட்டி, ராயம்பட்டி, புதுப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, பிச்சமணியாரம்பட்டி, தெற்கு அஞ்சல்காரன்பட்டி உள்ளிட்ட 18 கிராம மக்கள் கலந்து காண்டனர்.
தேரோட்டத்தைத் தொடர்ந்து,  தூய தோமையார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.